தேவையானவை:
துவரம் பருப்பு – 1/2 கிலோ,
விதை நீக்கி பொடியாக நறுக்கிய பாகற்காய் துண்டுகள் – 1 கப்,
பச்சை மிளகாய் – 16,
சீரகம் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு.
செய்முறை:
துவரம் பருப்பை சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், சீரகம், உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும். பின்னர் அரைத்த மாவுக் கலவையுடன் பாகற்காய் துண்டுகளை சேர்த்துக் கலந்து சிறு வடைகள் போலத்தட்டி வெயிலில் காய வைக்கவும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த பாகற்காய் வடாமைப் பொரித்துக் கொடுத்தால் மிகவும் நல்லது.