சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி 80வது பிறந்த நாளில், அவர் நம் நாட்டுக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்புகளை நினைவுகூர்கிறோம். நவீன, தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற அவரது கனவும், அதற்கான அவரது முன்னோடி முயற்சிகளும் நமது வளர்ச்சிக்கு தொடர்ந்து வழிகாட்டியாக விளங்கி வருகின்றன என கூறியுள்ளார்.
ஒண்டிவீரன் நினைவு நாளையொட்டி வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவு: தென்மலைப் போரில் வெளிக்காட்டிய ஒப்பிலா வீரத்தால் வரலாற்றில் நிலைத்துவிட்ட விடுதலைத் தீரர் ஒண்டிவீரனின் நினைவு நாளில் அவருக்கு எம் புகழ்வணக்கம். ஆங்கிலேயருக்கு எதிரான போர்களில் அவர் பெற்ற வெற்றிகள் நம்முள் என்றும் சுயமரியாதைச் சுடர் அணையாமல் காக்கும்.