இந்திய துப்பாக்கிசுடுதல் நட்சத்திரம் அபினவ் பிந்த்ரா (41 வயது), சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐஓசி) சார்பில் பெருமைமிகு ‘ஒலிம்பிக் ஆர்டர்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். பாரிசில் நடந்த 142வது ஐஓசி கூட்டத்தில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் ஆண்கள் துப்பாக்கிசுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற பிந்த்ரா, ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தவர் ஆவார்.