மேட்டுப்பாளையம்: நீர்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக இவ்வாண்டு 3வது முறையாக பில்லூர் அணை நிரம்பியது. பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 13,000 கனஅடி நீர் பவானி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. பில்லூர் அணையில் நீர் திறப்பால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.