செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், சிங்கப்பெருமாள் கோவில் சாய் விக்னேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் சிவா (34). நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி வைத்திருந்தார். நேற்று காலையில் பார்த்தபோது, அது திருடு போனது தெரிய வந்தது.
இதுகுறித்து, சிவா மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் அடிப்படையில் இருசக்கர வாகனம் திருடிய வாலிபரை வலை வீசி தேடி வருகின்றனர்.