புழல்: புழல் அடுத்த புத்தகரம் விக்னேஸ்வரா நகர், காந்தி தெருவை சேர்ந்த வெங்கடேஷ் (54), கடந்த 2 நாட்களுக்கு முன், தனது பைக்கை இரவில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது பைக் திருடு போனது தெரிந்தது. புகாரின் பேரில், புழல் போலீசார் விசாரணை செய்தனர். அதில், புழல் அடுத்த சண்முகபுரம் இந்திரா நகரை சேர்ந்த மோகனசுந்தரம் (20), அவரது நண்பர் ஜீவா (24) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேர், பைக்கை திருடியது தெரிந்தது. அவர்களை பிடித்து விசாரித்தனர். இதில், மோகனசுந்தரம் மீது புழல் காவல் நிலையத்தில் கஞ்சா மற்றும் வழிப்பறி உள்பட பல வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து பைக்கை பறிமுதல் செய்த போலீசார், மாதவரம் நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி, மோகனசுந்தரம், ஜீவா ஆகிய இருவரை புழல் சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை சென்னையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.