திண்டுக்கல்: நத்தம் அருகே தனியார் பள்ளி பேருந்து மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே லிங்கவாடியை சேர்ந்தவர் முருகன். இவர் தன்னுடைய உறவினர் திருமணத்துக்ககா மனைவி, மகனுடன் நத்தம் நோக்கி சென்று கொண்டிருந்தார். மதுரை – நத்தம் சாலையில் முடக்குசாலை பகுதியில் இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி பேருந்து மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே முருகன் (40), அவரது மனைவி பஞ்சு, 6 வயது மகன் ஸ்ரீதர் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த கார் ஓட்டுனர் முருகனுக்கு மேலும் 4 பெண் குழந்தைகள் உள்ளனர். இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.