புதுடெல்லி,ஜூன்4: இன்று மக்களவை தேர்தல் வெளியாகும் நிலையில் பிரதமர் மோடியை நேற்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் சந்தித்து பேசினார். நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கு ஏப்.19 தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டமாக தேர்தல் நடந்தது. இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து பா.ஜ தேர்தலை சந்தித்தது. அங்குள்ள 40 தொகுதிகளில் பா.ஜ தலைமையிலான கூட்டணிக்கும், லாலுபிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நடந்தது.
இன்று தேர்தல் முடிவுகள் வெளிவரும் சூழ்நிலையில் பிரதமர் மோடியை நேற்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் டெல்லியில் சந்தித்து பேசினார். இருவரும் என்ன பேசினார்கள் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. தேர்தல் முடிவு அடிப்படையில் நிதிஷ்குமாரை ஒன்றிய அமைச்சராக நியமிக்க ஆலோசிக்கப்பட்டதா என்பது குறித்தும் தெரியவில்லை.