பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில சமூக நலத்துறை செயலாளரும், மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான பந்தனா பிரேயாஷி அளித்த பேட்டியில், ‘‘குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி மாநில, மாவட்ட, சப் டிவிஷன் அளவில் முழு நேர பாதுகாப்பு அதிகாரிகள் பணியிடங்களை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. தற்போது இப்பதவிக்கு 390 பேரை நியமிக்க ஒப்புதல் தரப்பட்டுள்ளது. விரைவில் பணி நியமன பணிகள் தொடங்கும். மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் முழு நேர பாதுகாப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். மாநில அளவிலான பாதுகாப்பு அதிகாரிகள் மாநில அரசால் நியமிக்கப்படுவார். குடும்ப வன்முறை வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ பாதுகாப்பு அதிகாரிகள்: பீகார் அமைச்சரவை ஒப்புதல்
0
previous post