சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: பீகாரில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொண்டுள்ளது. ஏழைகள், தலித் மக்கள், பழங்குடியினர் மற்றும் மத சிறுபான்மையினர் ஆகியோரின் பெயர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்க ஒரு சதியாகவே தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடக்கிறது.
இது அரசியலமைப்புக்கும், ஜனநாயகத்துக்கும் எதிரானது. ஏழைகள், பின்தங்கியோர் உள்ளிட்டோரின் வாக்குரிமையை பறிக்க திட்டமிட்ட சதியாகவே தெரிகிறது. வாக்காளர் பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் கோரியுள்ளது தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) போன்றதாகவே இருக்கிறது. இதனை முற்றிலும் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.