தர்பங்கா: பீகார் மாநிலம் தர்பங்காவில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். மேலும் மாநிலத்தில் ரூ.12,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் முதல்வர் நிதிஷ் குமார், ஒன்றிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “தர்பங்காவில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பீகார் சுகாதாரத்துறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்’’ என்றார்.
பீகாரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
0