டெல்லி: 12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம், ராஜ்கிரில் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் செப்டம்பா் 7ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஆசிய கோப்பையில் இந்தியா, ஜப்பான், தென் கொரியா, சீனா, மலேசியா, ஓமன், சீன தைபே, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பங்கேற்பது வழக்கம். ஆனால், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக இந்த தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் ஒன்றிய அரசின் அறிவுறுத்தலின்பேரில் முடிவு எடுக்கப்படும் என்று ஹாக்கி இந்தியா அமைப்பு தெரிவித்து உள்ளது. பாகிஸ்தான் அணி இந்தியா வருவதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்தால் 7 அணிகளுடன் போட்டியை நடத்துவதா? அல்லது பாகிஸ்தானுக்கு பதில் வேறு அணியை சோ்ப்பதா என்பது குறித்து ஆசிய ஹாக்கி சம்மேளனம் அப்போது முடிவு எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகாரில் ஆசிய கோப்பை ஹாக்கி: பாகிஸ்தான் அணிக்கு அனுமதி வழங்கப்படுமா?
0