பாகல்பூர்: பீகாரில் கடந்த சில மாதங்களில் அடுத்தடுத்து 10க்கும் மேற்பட்ட பாலங்கள் இடிந்து விழுந்தன. இதனால் பாலங்கள் தரமற்ற முறையில் கட்டப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் பாகல்பூர் மற்றும் ககாரியா மாவட்டங்களை இணைக்கும் வகையில் கங்கை ஆற்றில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. 3.16கி.மீ. நீளம் கொண்ட இந்த பாலத்தின் ஒரு பகுதி கடந்த 2022ம் ஆண்டு இடிந்து விழுந்தது. ஒரு ஆண்டு கழித்து இரண்டாவது முறையாகவும் பாலம் இடிந்தது. இந்நிலையில் கட்டப்பட்டு வரும் இந்த பாலத்தின் ஒரு பகுதி நேற்று தகர்க்கப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
பீகாரில் 3வது முறையாக இடிந்து விழுந்த பாலம்
previous post