அண்ணாநகர்: முகப்பேர் பகுதியில் நேற்று முன்தினம் ஜெ.ஜெ.நகர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதியில் வாலிபர் ஒருவர் தள்ளுவண்டியில் பானிபூரி விற்பனை செய்து கொண்டிருந்தார். அங்கிருந்த சில வாலிபர்கள் போலீசாரை கண்டதும், அங்கிருந்து நைசாக கலைந்து சென்றனர்.சந்தேகத்தின் பேரில், போலீசார் அந்த தள்ளுவண்டி கடையை சோதனை செய்தபோது, குட்கா பொருட்கள் இருந்தது. விசாரணையில், பீகார் மாநிலத்தை சேர்ந்த தன்பகதூர் (30) என்பவர், முகப்பேர் பாடி புதூர் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, தள்ளுவண்டியில் பானிபூரி விற்பனை செய்வது போல் நடித்து, குட்கா விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 1,300 கிராம் குட்கா பாக்கெட்டை பறிமுதல் செய்தனர்.