டெல்லி: பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தத்தால் 2 கோடி பேர் வாக்களிக்கும் உரிமையை இழப்பர் என இந்தியா கூட்டணி குற்றசாட்டு வைத்துள்ளது. புலம்பெயர்ந்த மக்கள் சுமார் 2 கோடி பேர் வாக்களிக்கும் உரிமையை இழப்பர். பீகாரில் நடப்பாண்டு இறுதியில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது. சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டன. பீகார் மக்கள் தொகையில் குறைந்தது 20% புலம்பெயர்ந்த மக்கள் உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் முறையீடு செய்தனர்.
பீகாரில் 2 கோடி பேர் வாக்களிக்கும் உரிமை இழப்பர்: இந்தியா கூட்டணி குற்றசாட்டு
0
previous post