பாட்னா: இந்தியாவிலேயே முதன்முறையாக பீகார் மாநிலத்தில் செல்போன் செயலி மற்றும் இணையதளம் மூலமாக வாக்களிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் பாட்னா, ரோப்டாஸ் மாற்றும் கிழக்கு சம்பாரன் ஆகிய மாவட்டங்களில் உள்ள 6 நகராட்சிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் நாட்டிலேயே முதன்முறையாக இ-வோட்டிங் எனப்படும் ஆன்லைன் வோட்டிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்குசாவடிகளுக்கு வரமுடியாத முதியவர்கள், மாற்றுதிறனாளிகள், முதியவர்கள், கர்பிணிகள், புலம் பெயர்ந்தவர்களுக்காக இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. மாநில தேர்தல் ஆணையமும், C-DAC எனப்படும் centre for development of advance computing என்ற நிறுவனமும் இணைந்து இரண்டு செல்போன் செயலிகளை உருவாக்கி உள்ளன. இந்த செயலியை செல்போனின் பதிவிறக்கம் செய்து கொண்டால் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க முடியும். வாக்களிப்போரின் சதவீகிதத்தை அதிகரிப்பதற்காக இந்த முறையை நாட்டிலேயே முதன்முறையாக பீகார் மாநிலம் அறிமுகப்படுத்தி உள்ளன.
செயலியை பதிவிறக்கம் செய்வோரின் உண்மை தன்மையை பரிசோதிக்கும் பணிகளை தமிழ்நாட்டை சேர்ந்த Face Dakar என்ற நிறுவனம் மேற்கொள்கிறது. செல்போன் இல்லாதவர்கள் இணையத்தளம் மூலமும் வாக்களிக்கலாம். செல்போன் செயலி மூலம் வாக்களிக்க 10,000 பேரும், இணையத்தளம் மூலம் வாக்களிக்க 50,000 பேரும் முன்பதிவு செய்திருந்தனர். பீகாரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் இந்த ஆன்லைன் வாக்களிப்பு முறை அறிமுகப்படுத்தப்படுமா என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யவில்லை. இந்த வாக்களிப்பு மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்பட்டுள்ளன.