போபால்: போபாலில் நகைக்கடையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை பறித்த அக்னிவீரர் மோகித் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். விடுமுறைக்காக வீட்டுக்கு வந்தபோது கொள்ளையில் ஈடுபட்டார். ஆகஸ்ட் 13-ல் நடந்த கொள்ளை தொடர்பாக சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் மொகித் சிங் உள்பட 7 பேரை கைதுசெய்தனர்.
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் உள்ள பாக்செவானியா பகுதியில் உள்ள நகைக் கடையில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் போலீஸார் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, இந்த கொள்ளையின் முக்கிய குற்றவாளி மோகித் சிங், இந்திய இராணுவத்தில் உள்ள அக்னிவீர் சிப்பாயாக பணியாற்றி வருகிறார். மேலும் அவர் தற்போது பதன்கோட்டில் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் விடுமுறையில் போபாலுக்கு தனது சகோதரி மற்றும் மைத்துனர் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து விசாரணை நடையெப்ற்று வருகிறது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை, போபாலின் பாக்செவானியா பகுதியில் உள்ள நகைக் கடைக்குள் நுழைந்த இருவர், துப்பாக்கி முனையில் கடை உரிமையாளரை சூறையாடினர். இதன்போது, குற்றவாளிகளில் ஒருவர் கடைக்காரரையும் கத்தியால் தாக்கியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நகைக்கடையில் துப்பாக்கியை காட்டி மிரட்டி ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணத்தை பறித்த அக்னிவீரர் மோகித் சிங் கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் 13-ல் நடந்த கொள்ளை தொடர்பாக சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் மொகித் சிங் உள்பட 7 பேரை கைது செய்தனர்.