மத்தியப்பிரதேசம்: மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் பாஜக ஆட்சியை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக ஆட்சியில் மத்தியப்பிரதேசத்தில் ஊழல் மலிந்துவிட்டதாகவும் காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டு வைத்தனர். தடுப்பு வேலிகளை தாண்டி பாஜக முதலமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் மீது தடியடி நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து போலீசார் விரட்டியதால் பதற்றம் ஏற்பட்டது. பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துவிட்டதாகவும் காங்கிரஸ் குற்றச்சாட்டு வைத்துள்ளது.
போபாலில் பாஜக ஆட்சியை கண்டித்து காங்கிரஸ் கட்சி போராட்டம்..!!
previous post