சென்னை: பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி கால்வாயில் ஆகஸ்ட் 15 முதல் தண்ணீர் திறந்துவிட தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் டிசம்பர் 13 வரை 120 நாட்கள் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவிட்டுள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி திட்ட கால்வாய் மற்றும் சென்னாசமுத்திரம் பகிர்மான கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படும். 1,03,500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 23,846.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க ஆணையிட்டுள்ளது.