சென்னை: பவானிசாகர் அணையில் இருந்து முதல்போக பாசனத்துக்காக நாளை முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவு அளித்துள்ளது. கீழ்பவானி திட்டப் பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகளின் நன்செய் பாசனத்துக்கும் தண்ணீர் திறக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகளின் நன்செய் பாசனத்துக்கும் தண்ணீர் திறக்க ஆணையிட்டுள்ளனர்.