திருவள்ளூர்: பாரதி மெட்ரிக் பள்ளி மழலையர் பள்ளியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. திருவள்ளூர், ராஜாஜிபுரம், பாரதி மெட்ரிகுலேசன் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் சீ.பார்த்தசாரதி தலைமை வகித்தார். செயலாளார் பா.ராஜாராமன், நிர்வாக அறங்காவலர் இரா.ஹேமகௌதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் பா.சுமதி வரவேற்றார். இந்த விழாவில் திருமுல்லைவாயல் எக்ஸல் மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் எஸ்.ஏ.பாலகிருஷ்ணன் மழலையர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார். மேலும் ஆவடி கிரெசண்ட் மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் குலாப் ஹூசைன், வேப்பம்பட்டு ஸ்ரீ ஞானபானு வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளி தாளாளர் எம்.ராதா ஆகியோர் கலந்துகொண்டு, கடந்த ஆண்டு 10ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கும், கடந்த ஆண்டு ஒவ்வொரு வகுப்பிலும் முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்களுக்கும் பரிசுகளை வழங்கினர்.
பாரதி மெட்ரிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
0
previous post