Wednesday, May 14, 2025
Home செய்திகள்Banner News பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு போட்டிகள்

பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு போட்டிகள்

by Neethimaan


சென்னை: பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் வாயிலாக “தமிழ் வெல்லும்” என்னும் தலைப்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதுபற்றிய விவரம்: பேச்சுப் போட்டி – தலைப்புகள்:தமிழ் எங்கள் உயிருக்கு நேர்,உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே,பாரடா உனது மானிடப் பரப்பை, எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் ஒரு கதை சொல்லட்டுமா குறித்து பதிவிட வேண்டும்.

வீடியோ அல்லது ஆடியோ வடிவில் அமைதல் வேண்டும். (3 நிமிடம்). கவிதைப் போட்டி- தலைப்புகள்: தமிழே! தமிழர் உயிரே,வரிப் புலியே தமிழ் காக்க எழுந்திரு,இனிமைத் தமிழ்மொழி எமது,தமிழும் நானும் என நான்கு தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் 1 பக்க அளவில் கவிதைகள் அமைதல் வேண்டும். கவிதைகளை எழுதி கோப்பாக அனுப்ப வேண்டும்.

கட்டுரைப் போட்டி- தலைப்புகள்:புதியதோர் உலகு செய்வோம்,துறைதோறும் தொண்டு செய்வாய், அறிவை விரிவு செய்,மாபெரும் தமிழ்க் கனவு என நான்கு தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் 3 பக்க அளவில் கட்டுரைகள் அமைதல் வேண்டும். கட்டுரைகளை எழுதி கோப்பாக அனுப்ப வேண்டும். ஓவியப் போட்டி- பாவேந்தரின் கவிதைகள், காவியங்கள், நாடகங்களைக் கருவாகக் கொண்டு ஓவியங்கள் அமைதல் வேண்டும்.ஓவியங்களை கோப்பாக அனுப்ப வேண்டும்.

ஒப்பித்தல் போட்டி- தலைப்பு: பாவேந்தரின் ‘தமிழியக்கம் நூலிலிருந்து 1(கரும்பு தந்த தீஞ்சாறே), 3 (ஒண்டமிழ்த்தாய் சிலம்படியின்) பாடல்களைப் பரிந்துரைக்கலாம்.குறித்து பதிவிட வேண்டும். வீடியோ அல்லது ஆடியோ வடிவில் அமைதல் வேண்டும். (3 நிமிடம்).போட்டியில் கலந்து கொள்பவர்கள் tndiprmhtamilvellum@gmail.com < mailto: tndiprmhtamilvellum@gmail.com > என்ற மின்னஞ்சல் மற்றும் கீழ்கண்ட விரைவு துலங்கள் குறியீடு (QR code) வாயிலாகவும் படைப்புகளை மே- 31 ந் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi