ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 400 இன்ஜினியர் டிரெய்னீஸ் இடங்கள் காலியாக உள்ளன. பி.இ., படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி விவரம்:
1. Engineer Trainee: 150 இடங்கள்.
துறை வாரியாக பணியிடங்கள் விவரம்:
அ. மெக்கானிக்கல்: 70 இடங்கள் (பொது-28, பொருளாதார பிற்பட்டோர்-7, ஒபிசி-20, எஸ்சி-10, எஸ்டி-5)
ஆ. எலக்ட்ரிக்கல்: 25 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-2)
இ. சிவில்: 25 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-2)
ஈ. எலக்ட்ரானிக்ஸ்: 20 இடங்கள் (பொது-8, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-2)
உ. கெமிக்கல்: 5 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்சி-1)
ஊ. மெட்டலர்ஜி: 5 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்சி-1)
சம்பளம்: ரூ.50,000- 1,60,000. வயது: 27க்குள்.
தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ சிவில்/கெமிக்கல்/மெட்டாலர்ஜி ஆகிய பாடப்பிரிவுகள் ஏதேனும் ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்.,
2. Supervisor Trainee: 250 இடங்கள்
துறை வாரியாக பணியிடங்கள் விவரம்:
அ. மெக்கானிக்கல்: 140 இடங்கள் (பொது-64, பொருளாதார பிற்பட்டோர்-14, ஒபிசி-30, எஸ்சி-22, எஸ்டி-10)
ஆ. எலக்ட்ரிக்கல்: 55 இடங்கள் (பொது-24, பொருளாதார பிற்பட்டோர்-3, ஒபிசி-15, எஸ்சி-10, எஸ்டி-3).
இ. சிவில்: 35 இடங்கள் (பொது-13, பொருளாதார பிற்பட்டோர்-4, ஒபிசி-10, எஸ்சி-5, எஸ்டி-3)
ஈ. எலக்ட்ரானிக்ஸ்: 20 இடங்கள் (பொது-10, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-5, எஸ்சி-2, எஸ்டி-1).
சம்பளம்: ரூ.32,000- 1,00,000.
வயது: 27க்குள்.
தகுதி: மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ சிவில் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒன்றில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ இன்ஜினியரிங் முடித்திருக்க வேண்டும். டிப்ளமோ படித்திருக்க வேண்டிய முக்கிய பாடப்பிரிவுகள், அதற்கு இணையான பாடப்பிரிவுகள் பற்றிய விவரம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
கட்டணம்: பொது/ பொருளாதார பிற்பட்டோர்/ ஒபிசியினருக்கு ரூ.1000/-. எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.400/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
சிபிடி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.www.careers.bhel.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.02.2025.