புவனேஷ்வர்: பாரதம் என்ற பெயரை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என பிஜு ஜனதா தள எம்எல்ஏ அமர் பிரசாத் சத்பதி தெரிவித்துள்ளார்.
பிஜு ஜனதா தள எம்எல்ஏ அமர் பிரசாத் சத்பதி புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
“பல்வேறு விஷயங்கள் காலப்போக்கில் மாறிக் கொண்டே வருகின்றன. ஒரிசா, பெங்களுர், மெட்ராஸ் என பல பெயர்களும் மாற்றப்பட்டன. நாட்டின் பெயரை மாற்றுதில் அரசியல் இருக்க கூடாது. அனைத்து விஷயங்களையும் அரசியல் கண்ணோட்டத்துடன் அணுகக் கூடாது. இந்தியா பெயரை பாரதம் என மாற்றுவதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.