சென்னை: சிறந்த ஹாக்கி ஆட்டங்களைக் காண அனைவரும் வர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: 16 ஆண்டுகளுக்குப் பின் பன்னாட்டு ஹாக்கி போட்டிகள் சென்னைக்குத் திரும்புகின்றன. உலகத் தரத்திலான செயற்கை இழை மைதானத்தில் நேற்று ஆசிய ஆடவர் ஹாக்கி கோப்பை 2023 தொடங்குகிறது. தமிழ்நாட்டின் விளையாட்டு ஆர்வலர்கள், மாணவர்கள், இளைஞர்கள் அனைவரும் பெருமளவில் திரண்டு வந்து சிறந்த ஹாக்கி ஆட்டங்களைக் காண அழைக்கிறேன். ஆசியாவின் மிகப்பெரும் ஹாக்கி தொடரின் பெரிய, பெருமைமிகு ஆதரவாளர்களாகச் சென்னையைத் திகழச் செய்வோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.