சென்னை: சிகாகோவில் நடைபெற்ற விழாவில் நியூயார்க்கின் சிறந்த சமையல் கலைஞருக்கான விருதை தமிழ்நாட்டை சேர்ந்த செஃப் விஜயகுமார் வென்றுள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த செப் விஜயகுமாரை பாராட்டி, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது:
நத்தத்தின் புகையூட்டும் சமையலறைகளிலிருந்து ஜேம்ஸ் பியர்ட் மேடையின் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்கும்-செப் விஜய் குமார், உங்கள் பயணம் தமிழர்களின் வரலாற்றில் ஒரு மைல்கல். எளிமையான நமது பாரம்பரிய வேர்களிலிருந்து, காலத்தைக் கடந்து நிற்கும் பெருமிதத்திற்கு நீங்கள் வந்தடைந்துள்ளீர்கள்.
ஒருநாள் உங்களைச் சந்திக்கவும், கடல்கள் கடந்து கொண்டு தாங்கள் கொண்டு சென்றுள்ள உயிர்ப்புமிக்க அந்த உணவைச் சுவைத்திடவும், நான் ஆவலோடு உள்ளேன்.