சென்னை: பெங்களூரு ராமேஸ்வரம் கபேயில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என்று ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசினார்.இது தொடர்பாக திமுக சார்பில் அளித்த புகாரில் 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே தரப்பில், பெங்களூரு கபே குண்டு வெடிப்பு தொடர்பாக தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த விவகாரத்தில் மன்னிப்புக்கோரி பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ஷோபா கரந்தலஜே மன்னிப்பு கோரியதை தமிழக மக்கள் சார்பாக அரசு ஏற்றுக்கொள்வதாக கூறினார். இதை ஏற்ற நீதிபதி, ஒன்றிய இணையமைச்சர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.