சென்னை: பெங்களூரு கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிமுக கட்சிகள் இரங்கல் தெரிவித்துள்ளன.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): பெங்களூரு அணி வெற்றி பெற்றதை கொண்டாட, கூடிய ரசிகர்கள் கூட்ட நெரிசல் 11 பேர் உயிரிழந்திருப்பதுவேதனை அளிக்கிறது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என விழைகிறது.
பிரேமலதா (தேமுதிக பொதுச்செயலாளர்): பெங்களூரு அணி வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய தேமுதிக சார்பில் இறைவனை வேண்டி, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
பெங்களூரு நெரிசலில் 11 பேர் பலி இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக இரங்கல்
0