பெங்களூரு: பெங்களூரு கோரமங்களாவில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் தங்கியிருந்த 24 வயதான பீகாரை சேர்ந்த கிருத்தி குமாரி என்ற இளம்பெண் கடந்த 23ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டார். விடுதியின் 3வது மாடியில் இருந்த கிருத்தி குமாரியின் அறை கதவை தட்டி, வெளியே வந்த அவரை கத்தியால் கழுத்திலும் வயிற்றிலும் குத்தி கொலை செய்துவிட்டு கொலையாளி தப்பியோடினான். கொலையாளி மத்திய பிரதேசம் மாநிலம் போபாலை சேர்ந்த அபிஷேக் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
அபிஷேக்கும், கிருத்தி குமாரியின் தோழியும் காதலித்திருக்கின்றனர். அபிஷேக் வேலைக்கு செல்லாததால் அவரிடமிருந்து அந்த பெண் விலகியிருக்கிறார். இந்த பிரச்னையில் அபிஷேக்கின் காதலியான அந்த பெண்ணை கிருத்தி குமாரி வேறு விடுதியில் தங்க வைத்திருக்கிறார். இதைத் தெரிந்துகொண்ட அபிஷேக், தனது காதலியை பிரிய கிருத்தி குமாரி தான் காரணம் என்று அவரது விடுதிக்குள் நுழைந்து அவரை கொலை செய்திருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரை கொன்று விட்டு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் பதுங் கிய அபிஷேக்கை போலீசார் கைது செய்தனர்.