பெங்களூரு: பெங்களூருவில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதை சமாளிக்க காங்கிரஸ் அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்துள்ளது. பெங்களூருவில் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகிக்கும் பணியை முழுமையாக அரசே மேற்கொள்ளும். பெங்களூருவில் உள்ள தனியார் டேங்கர் லாரிகள் அனைத்தும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படுவதாகவும் டி.கே.சிவகுமார் அறிவிதுள்ளார். குடிநீர் டேங்கர் லாரிகள் தண்ணீர் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களை கொள்ளையடிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூருவில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்று டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் வரலாறு காணாத குடிநீர் தட்டுப்பாடு
341