பென்னலி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட டிஆர்கே 502 மற்றும் 502 எக்ஸ் ஆகிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களிலுமே 500 சிசி இன்லைன் -2 லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. அதிகபட்சமாக 47 எச்பி பவரையும், 46 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். புதிய அம்சமாக இந்த மோட்டார் சைக்கிள்களில் டிஎப்டி டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது.
இணைய இணைப்பின்றி செயல்படும் நேவிகேஷன் வசதி உள்ளது. புளூடூத் மூலம் மொபைல் போனை இணைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். டயரில் காற்று அழுத்தத்தை அறிந்து கொள்ளும் வசதி, ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. 502எக்ஸ்சில் கூடுதல் அம்சமாக பழைய ஸ்போக் வீல்களுக்கு பதில் கிரஸ் ஸ்போக் டியூப்லெஸ் டயர் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.6.2 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.