Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு பள்ளியில் பயில்வதால் கிடைக்கும் பலன்கள் பட்டியல்: பேனர் வைத்து அழைப்பு

நெல்லை: அரசுப்பள்ளியில் பயில்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து அரசு பள்ளி சார்பில் பட்டியலிட்டு பேனர் வைத்துள்ளனர். இது பொதுமக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவர்களுக்கு நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் அரசுப்பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில் 2025-26ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஒன்று, 6, மற்றும் 9, 11ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.

நெல்லை டவுன் ஆர்ச் அருகே உள்ள அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெறும் நிலையில் அரசுப்பள்ளியில் சேர்ந்து பயில்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்து விவர பட்டியலை பள்ளி முன் பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். அதில் இடம் பெற்றுள்ள தகவல்கள்: விலையில்லா நலத்திட்டங்களாக இலவச சீருடை, புத்தகங்கள், நோட்டுகள், புத்தகப்பை, காலணிகள், சாக்ஸ், அட்லஸ், கணித உபகரண பெட்டி, மதிய உணவு, மிதி வண்டி மற்றும் பிற திட்டங்களாக 7.5 சதவீத இட ஒதுக்கீடு, புதுமை பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகிய திட்டங்கள் உள்ளன.

காற்றோட்டமான வகுப்பறைகள், அனுபவமிக்க ஆசிரியர்கள், பஸ் வசதி, உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகம், ஸ்மார்ட் வகுப்பறை, அறிவியல் மன்றம், இலக்கிய மன்றம், வானவில் மன்றம், தமிழ் கூடல், உயர் கல்வி வழிகாட்டல், திறனாய்வு தேர்வு பயிற்சி, உலக திரைப்படம் திரையிடல், மருத்துவ பரிசோதனை போன்ற வசதிகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.