நன்றி குங்குமம் தோழி
வேப்பிலை: ஆற்றல் மிக்க கிருமிநாசினி. ஆன்டி பாக்டீரியா மற்றும் ஆன்டி பங்கஸ் குணங்களைக் கொண்டது. தினமும் 5 வேப்பிலையை கழுவி மைய அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சுமார் 15 நாட்கள் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். பற்களில் ஏற்படும் சொத்தை, ஈறுகளின் பிரச்னைகளை தீர்க்கும். நீரிழிவு நோயும் நீங்கும். இரப்பை, குடல் சார்ந்த பிரச்னைகளிடமிருந்து பாதுகாக்கும்.
கீழாநெல்லி: கைப்பிடி அளவு எடுத்து மைய அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மஞ்சள் காமாலை, நீரிழிவு நோய் குணமாகும். கண்களின் பார்வை திறன் அதிகரிக்கும். சிறுநீரக கற்கள் வெளியேறும். கல்லீரலில் உள்ள நச்சுக்களை அப்புறப்படுத்தும்.
இஞ்சி: நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும். தினமும் அரை இஞ்ச் இஞ்சியை தோல் சீவி சாப்பாட்டிற்கு முன் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜீரண மண்டலத்தை பலப்படுத்தும். வெயில் காலத்தில் ஒரு கப் குளிர்ந்த நீரில் இஞ்சியை நசுக்கிப் போட்டு எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.
நெல்லிக்காய்: வைட்டமின் சி ஆன்டி ஆக்ஸிடென்ஸ், பீட்டா கரோட்டினும் அதிக அளவில் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடல் வெப்பநிலையை சீராக்கும். வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கல்லீரல் சுத்தமாகும். கொலஸ்ட்ராலை குறைத்து, முதுமையை தடுக்கும்.
வல்லாரை கீரை: ஜூஸாக சாப்பிட நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பத்து இலைகளை வெந்நீரில் அலசி 5 மிளகுடன் அரைத்து மோருடன் தினமும் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து சாப்பிட்டால் உடல் தளர்வு நீங்கும்.
– மாலதி நாராயணன், சென்னை.