நன்றி குங்குமம் டாக்டர்
திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. தினமும் காலையில் கிஸ்மிஸ் எனப்படும் உலர்ந்த திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள் பார்ப்போம்:
இதன் இயற்கையான சர்க்கரை உள்ளடக்கம். ஆற்றல் ஊக்கத்தை நமக்கு வழங்குகிறது.
நார்ச்சத்து உள்ளதால் செரிமானத்திற்கு உதவுகிறது மலச்சிக்கலை தடுத்து குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. ஆன்டிஆக்ஸிடன்டுகள் நிறைந்த கிஸ்மிஸ் ஊறி சாப்பிட்டால், ப்ரிரேடிகல்களை எதிர்த்து போராடும். ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கும். ஒட்டுமொத்த செல்லுலார் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கிஸ்மிஸ் ஊறிய தண்ணீரை குடிப்பது கல்லீரலில் நச்சுகளை நீக்க உதவும். கல்லீரல் அமைப்பை சீராக்கி, உடலை சுத்தமாக பராமரிக்க உதவும். ஊறிய திராட்சையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆக இந்த நீரில் ஊறிய திராட்சை மற்றும் நீரை உட்கொள்வதன் மூலம் உடல் சோர்வை குறைத்து ஆரோக்கியமான ரத்த உற்பத்திக்கும் உதவும்.
கெட்ட கொழுப்பை குறைத்து ஆரோக்கியமான இதயத்திற்கு உதவுகிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.அமில ரிப்ளக்ஸை குறைக்கிறது. வயிற்றில் பிஎச் அளவை ஊக்குவிக்கிறது.நோய் எதிர்ப்புச் சக்தியை இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கூட்டுகின்றன. வைட்டமின் சி, நோய் எதிர்ப்புச் சக்தியை பலப்படுத்துகிறது. உடலில் ஏற்படும் தொற்றுகளை எதிர்த்து போராடி காக்கிறது.குறைந்த கலோரி அதேசமயம் ஊட்டச்சத்து அதிகம். பலன் பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதன்மூலம் எடையை குறைக்கும் வாய்ப்பு அதிகம்.
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.மஞ்சள்காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும்.உலர் திராட்சைப் பழங்களை எடுத்து நன்றாக கழுவி, பசுவின் பாலில் இட்டு காய்ச்சி ஆற வைக்கவும். பின்னர் அதிலிருக்கும் பழங்களை சாப்பிட்டு, அந்த பாலை குடித்தால் மலச்சிக்கல் வராது. இதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவும்.
தொகுப்பு: ரிஷி