Thursday, September 21, 2023
Home » அரசின் திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பயனாளிகளை நேர்காணல் செய்து ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

அரசின் திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பயனாளிகளை நேர்காணல் செய்து ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

by Arun Kumar

சென்னை: அரசின் திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பயனாளிகளை நேர்காணல் செய்து பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் மற்றும் சமூக ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மண்டல இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தலைமையில் நேற்று சென்னை மாநில செய்தி நிலைய கூட்டரங்கில் கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் மதுரை மண்டலங்களின் இணை இயக்குநர்கள் மற்றும் இம்மண்டலங்களுக்குட்பட்ட மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களின் பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகளில் சிலை மற்றும் அரங்கம் கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யும் வகைகளில் காலம் தாழ்த்தாமல் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து இடங்களை விரைவாக தேர்வு செய்து மாவட்ட ஆட்சியரின் முன்மொழிவுகளை விரைந்து தலைமையிடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.அனைத்து மாவட்டங்களிலும் கடந்த ஜூலை 18ம் நாளை தமிழ்நாடு நாள் விழாவாக மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி மாவட்டங்களிலுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகளின் சிலைகளை தூய்மைப்படுத்தி ஆகஸ்டு 15ம் நாளன்று மலர் மாலை அணிவித்தும், அரங்கங்கள், நினைவகங்கள், நினைவுத் தூண்கள் மற்றும் மணிமண்டபங்களை தூய்மைப்படுத்தி ஆகஸ்டு 14, 15 மற்றும் 16 ஆகிய மூன்று நாட்களுக்கு அவற்றை வண்ண விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும்.

மாவட்டங்களில் பொதுமக்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் போன்றோர்களிடம் தெரிவிக்கும் கோரிக்கைகளை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் கண்டறிந்து மண்டல இணை இயக்குநர்கள் மூலம் தலைமையிடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலம் அடுத்த வருடத்தில் அவர்களது கோரிக்கைகளை அறிவிப்பாக அறிவித்து நிறைவேற்ற ஏதுவாக இருக்கும். மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தங்களது அரசு நிகழ்ச்சிகளை முடித்து திரும்பும் பொழுது, அரசினால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் மூலம் பயன் பெற்ற விவசாயிகள், மாணவர்கள் போன்ற பயனாளிகளை மாவட்ட ஆட்சித் தலைவர்களை செய்தியாளர்களோடு சந்திக்கச் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?