*360 சதுர அடியில் புதிய வீடு, கழிவறை வசதிகள்
*அமைச்சர் சா. சி. சிவசங்கர் பேச்சு
பெரம்பலூர் : ஊரகப்பகுதியில் உள்ள குடிசை வீடுகளை மாற்றுவதே கலைஞரின் கனவு இல்லத்திட்டத்தின் நோக்கம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கூறினார்.
பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைசார்பில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள், ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டத்தின் கீழ் வீடுகளை புனரமைப் பதற்கான ஆணைகள் மற்றும் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஊராட்சிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தலைமை வகித்தார். பெரம்பலூர் பாராளுமன்றத்தொகுதி எம்பி கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் நலுனுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் வாழ்வாதாரத்தை மேம் படுத்துவதற்காகவும் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்கவேண்டும் என்பதற்காக முன்னால் முதல்வர் கருணாநிதி கடந்த 2010ம் ஆண்டு கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி னார். இந்தத் திட்டத்தினை முழுமையாக செயல்படுத்தவும், வீடு கட்ட இயலாத ஏழை,எளிய மக்களுக்கு வீடு கட்டித் தரவும், குடிசை இல்லா தமிழகம் உருவாக்கிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தை அறிவித்து, 2024-25 ஆம் ஆண்டில் 1 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என்று கூறினார்.
கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின் முக்கிய நோக்கமே ஊரகப்பகுதிகளில் உள்ள குடிசைகளை மாற்றி அனைவருக்குமே பாதுகாப்பான, நிரந்தர காங்கிரீட் வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பதே ஆகும். குடிசை வீடுகளில் வசிப்பவர்கள், சேதம் அடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், பட்டா இருந்தும் சொந்தமாக வீடு இல்லாதவர்கள் ஆகிய ஏழை,எளிய மக்களை கண்டறிந்து, அவர்களுக்கு ஊரக வளர்ச்சி முகமை வாயிலாக 360 சதுர அடி பரப்பளவில், சமையலறை, கழிவறை வசதிகளுடன் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் மூலம் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் வீடுகள் கட்டித்தரப்படும்.
இதன்படி பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் 1,111 பயனாளிகளுக்கு ரூ38.89 கோடி மதிப்பீட்டில் கலைஞர்கனவு இல்லம் திட்டத்தில் புதிய வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஊரக வீடுகள் பழுது நீக்கம் திட்டத்தின் கீழ் ஓட்டு வீடு, சாய்தள வீடுகளில் சிறு பழுது, பெரும் பழுதுநீக்கம் செய்வதற்காக பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியத் திற்குட்பட்ட ஊராட்சிகளில் 895 பயனாளிகளுக்கு ரூ8.15 கோடி மதிப்பீட்டில் வீடுகள் புனரமைப்பதற்கான ஆணைகள் வழங்கப் பட்டுள்ளது.
மேலும்,பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121கிராம ஊராட்சி களுக்கும் மக்கள்தொகை அடிப்படையில் 186 உபகரணங்கள் வரப்பெற்றது. 9,000மேல் மக்கள் தொகை உள்ள ஊராட்சிகளுக்கு 3 உபகரணத் தொகுப்பு வீதமும், 3500க்கு மேல் மக்கள் தொகை உள்ள ஊராட்சிகளுக்கு 2 உபகரணத் தொகுப்பு வீதமும், மற்ற கிராம ஊராட்சிகளுக்கு 1 உபகரண தொகுப்பும் இன்று வழங்கப்படுகிறது.
இந்த விளையாட்டு உபகரணத் தொகுப்பில், கிரிக் கெட், கையுந்துப்பந்து, எறிபந்து, கால்பந்து, டென்னிக்காய்ட், ஸ்கிப்பிங், கேரம், சிலம்பம், செஸ், கபாடி, இறகுபந்து போன்ற விளையாட்டுகளுக்குத் தேவையான உபகரணங்கள், உடற்பயிற்சிக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் டி-ஷர்ட், விசில், கோன்ஸ், தொப்பி ஆகிய 33 உபகரணங்கள் இதில் அடங்கும்.
பெரம்பலூர் மாவட்டத்தை குடிசையில்லா மாவட்டமாக மாற்றுவதே தமிழக முதல் வரின் தலைமையிலான அரசின் தலையாய கடமை யாகும். எனவே, இத்திட்டத் தின் கீழ் ஆணை பெற்றப் பயனாளிகள் விரைவில் தங்களது வீடுகளைக்கட்டி முடிக்க வேண்டும். அப்போதுதான் அடுத்த ஆண்டு குடிசைகளில் வாழும், வீடில்லாத தகுதிவாய்ந்த பயனாளிகளை தேர்வு செய்து புதிய வீடுகள் வழங்க எளிதாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
இந்த விழாவில் பெரம்ப லூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட ஊராட்சிதலைவர் குன்னம் ராஜேந்திரன், பெரம்பலூர் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் பெரம்பலூர் மீனா அண்ணாதுரை, வேப்பந்தட்டை ராமலிங்கம், அட்மா தலைவர்கள் ஜெகதீசன், ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் தழுதாழை பாஸ்கர், மகாதேவி ஜெயபால், நகராட்சி துணைத்தலைவர் ஹரிபாஸ்கர், பேரூராட்சி தலைவர்கள் சபிதா ராகினி, ருக் குமணி, வள்ளியம்மை, வட்டார வளர்ச்சிஅலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், துறைஅலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.