Monday, February 26, 2024
Home » பினாமிகள் பெயரில் போலி நிறுவனங்கள் தொடங்கி முதலீடு பிரபல மணல் குவாரி அதிபர்களின் ரூ.130 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

பினாமிகள் பெயரில் போலி நிறுவனங்கள் தொடங்கி முதலீடு பிரபல மணல் குவாரி அதிபர்களின் ரூ.130 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை

by Karthik Yash

சென்னை: பிரபல மணல் குவாரி அதிபர்களுக்கு சொந்தமான ரூ.130 கோடி மதிப்பிலான அசையும் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது. அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி பெரிய அளவில் மோசடி நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேநேரம், திருச்சி மற்றும் வேலூரில் இயங்கி வரும் மணல் குவாரிகளின் ஒப்பந்ததாரர்களாக பிரபல தொழிலதிபர்களான புதுக்கோட்டையை சேர்ந்த ராமச்சந்திரன்(எ)சண்முகம் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம்(எ) கருப்பையா ரத்தினம், கரிகாலன்(எ) பன்னீர்செல்வம் கரிகாலன் ஆகியோர் உள்ளனர்.

இவர்கள் நடத்தும் மணல் குவாரிகளில் வரும் வருமானத்தை சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைதொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 மணல் குவாரி அதிபர்களுக்கும் சொந்தமான சென்னை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழ்நாடு முழுதும் உள்ள மணல் குவாரிகள் மற்றும் அலுவலகங்கள் என 17 இடங்களில் கடந்த ஆண்டு செப்டம்பர் 12ல் அதிரடி சோதனை நடத்தினர். இதில், மணல் குவாரி அதிபர்கள் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் பினாமிகள் நடத்தும் அலுவலகத்தில் இருந்து சொத்துகள், கணக்கில் வராத ரூ.2.33 கோடி ரொக்க பணம், ரூ.56.86 லட்சம் மதிப்புள்ள 1024 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 3 தொழிலதிபர்களின் நிறுவனங்கள் மற்றும் அவர்கள் பெயரில் உள்ள 30 வங்கி கணக்களில் இருந்த ரூ.13 கோடி ரொக்க பணம் முடக்கப்பட்டது.

இதுபற்றி அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, தொழிலதிபர்களான 3 பேரும், கூட்டாளிகளுடன் சேர்ந்து ஒரு அமைப்பை உருவாக்கி போலியான நிறுவனங்கள் தொடங்கி மணல் குவாரியில் வந்த வருமானத்தை முறைகேடாக முதலீடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைதொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் மோசடியில் ஈடுபட்ட 3 மணல் குவாரி அதிபர்களுக்கு சொந்தமான 35 வங்கி கணக்கில் உள்ள ரூ.2.25 கோடி பணம், குவாரிகளில் மணல் அள்ள பயன்படுத்திய ரூ.128.34 கோடி மதிப்பிலான 209 இயந்திரங்கள் என ரூ.130.60 கோடி அசையும் சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

You may also like

Leave a Comment

9 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi