மதுரை: பெயர் மாற்றத்துக்கு பின்னால் இருப்பது தேசப்பற்றல்ல தேர்தல் பயம் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற முயற்சித்தவர்கள் இப்போது இந்தியா என்ற பெயரை மாற்ற முயற்சிக்கின்றனர் என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்தியாவைக் கண்டு பிரிட்டீஷாருக்கு பிறகு அதிகம் பயப்படுபவர்களாக பாஜகவினர் மாறியுள்ளனர் என்றும் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.