கோதுமை மாவு – 2 கப்
சீரகம் – 2 டீஸ்பூன்
மிளகுத்தூள், ஓமம் – தலா 1 டீஸ்பூன்
பீட்ரூட் துருவல் – 3 கப்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பச்சைப் பட்டாணி – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
முதலில் கொத்தமல்லித்தழையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு பச்சைப் பட்டாணியை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சீரகம், மிளகுத்தூள், ஓமம், பீட்ரூட் துருவல், கொத்தமல்லித்தழை, இஞ்சி – பூண்டு விழுது, அரைத்த பச்சைப் பட்டாணி, சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும். பிறகு பிசைந்த மாவை பூரிகளாக தேய்த்து வைத்துக் கொள்ளவும். கடைசியாக அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தேய்த்து வைத்துள்ள பூரியை போட்டு பொரித்து எடுத்துப் பரிமாறினால் சத்தான பீட்ரூட் பூரி தயார்!