தேவையான பொருட்கள்
இரண்டு பீட்ரூட்
இரண்டு கேரட்
ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய்
ஒரு டீஸ்பூன் கல் உப்பு
ஒரு டீஸ்பூன் மிளகு பொடி
செய்முறை
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு பீட்ரூட் கேரட் இவைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.இப்பொழுது ஒரு குக்கரில் நறுக்கிய பீட்ரூட் கேரட் இவைகளை மூன்று விசில் விட்டு நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.சிறிது ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். வடிகட்ட தேவையில்லை.இப்பொழுது அதை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி பச்சை வாசனை போகும் வரை நன்கு பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.இப்பொழுது அதில் உப்பு மிளகு பொடி சேர்த்து இறக்கவும்.கடைசியாக வெண்ணெய் போட்டு பரிமாறவும். சுவையான பீட்ரூட் கேரட் சூப் ரெடி.