சென்னை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26ம் கல்வியாண்டுக்கான பி.எட். மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் நேற்று சென்னை ராணி மேரி கல்லூரியி தொடங்கி வைத்தார்.பி.எட். மாணவர் சேர்க்கையில் 7 அரசுக் கல்லூரி 14 அரசு உதவிபெறும் கல்லூரிகளும் உள்ளன. இதில் அரசுக் கல்லூரியில் 900 இடங்களும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 1140 இடங்களும் என மொத்த 2040 இடங்கள் இள்ளன. இவற்றில் 2025-26ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் ஜூலை 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் ஜூலை 18ம் தேதி வெளியிடப்படும். ஜூலை 21 முதல் 25ம் தேதிக்குள் விருப்ப கல்லூரியைத் தேர்வு செய்யலாம். ஜூலை 28ல் இட ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆணையை தங்கள் ஐடி மூலம் www.iwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து ஜூலை 4ம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேரவேண்டும். ஆகஸ்டு 6ம் தேதி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கானவகுப்புகள் தொடங்கும். இதில் உயர்கல்வித் துறை செயலாளர் சமயமூர்த்தி, கல்லூரிக் கல்வி ஆணையர்சுந்தரவல்லி, ராணி மேரி கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி கலந்து கொண்டனர்.