தானே: மகாராஷ்டிராவின் தானேவின் வாக்பில் நகரை சேர்ந்தவர் 62 வயது பெண். இவர் சுமார் 160 கிலோ எடை உடையவர். உடல்நிலை சரியில்லாததால் இவர் நடமாடுவதில் சிரமம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை தனது படுக்கையில் இருந்த இந்த பெண் தவறி கீழே விழுந்தார். அவரை தூக்கி நிறுத்தி மீண்டும் படுக்கையில் அமர்த்த முடியாமல் குடும்பத்தினர் சிரமம் அடைந்தனர். இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் தானே மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். அதிகாரிகளின் நடவடிக்கையின்பேரில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் மாநகராட்சி பேரிடர் மேலாண்மை பிரிவினர் விரைந்து கீழே விழுந்த 160கிலோ எடை பெண்ணை மீண்டும் தூக்கி படுக்கையில் அமர வைத்தனர்.