Monday, February 26, 2024
Home » எந்த சருமத்திற்கு என்ன ஃபேசியல்…?

எந்த சருமத்திற்கு என்ன ஃபேசியல்…?

by Porselvi

ரூ.4999ல் திருமண மேக்கப் எங்களிடம் உண்டு’… எடுத்த எடுப்பிலேயே ஆச்சர்யம் கொடுக்கிறார் ஸ்டூடியோ 7 கிளை உரிமையாளர் சசிகலா. ஏனெனில் கிராமங்களிலேயே கூட இப்போதெல்லாம் ரூ.10000 குறைந்து திருமண மேக்கப்கள் யாரும் செய்வதில்லை. என்கையில் சென்னை போன்ற மெட்ரோ நகரத்தில் அதிலும் நகரத்தின் முக்கிய பகுதியான சூலைமேட்டில் ஒரு பார்லர் ரூ.4999 கட்டணத்தில் திருமண மேக்கப் செய்கிறார்கள் என்றால் ஆச்சர்யமாகத்தானே இருக்கும். ‘நான் மேக்கப் செய்துக்கணும்னு தேடும்போது எனக்கு எப்படிப்பட்ட வசதிகள், சர்வீஸ்கள் எல்லாம் தேவைப்பட்டதோ மேலும் எந்த கட்டணத்தில் நான் எதிர்பார்த்தேனோ அதே கட்டணத்தில் என்னைத் தேடி வரும் மக்களுக்காக நான் சலூன் ஆரம்பிக்க வேண்டும் என நினைத்தேன், அப்படியான சிந்தனைதான் இன்று ‘ஸ்டூடியோ 7‘ ஃபிரான்சைஸ் ஆரம்பிக்க துண்டுகோலாக இருந்தது. மேலும் என்னுடைய கணவர் சுஜய் பிரபு. அவரும் இந்த பார்லர் வைத்துக் கொடுத்தது துவங்கி நிறைய சப்போர்ட் செய்கிறார். ஹைட்ரா ஃபேசியல் துவங்கி, எல்லா வகையான பார்லர், பியூட்டி சர்வீஸ்கள் இங்கே நல்ல முறையில் செய்கிறோம்‘ உற்சாகமாக பேசுகிறார் சசிகலா. (ஸ்டூடியோ 7 (Franchise) Unisex Salon, OldNo: 227, New No:48/1, Choolaimedu High Road, Opp Amma Hospital, Choolaimedu, Chennai-600094, Contact: 8939670007, 9171571771) ஃபேசியல் குறித்து கேட்டவுடன் ‘அதற்கான நிபுணர்கள் இதுகுறித்து பேசினால் நன்றாக இருக்கும்’ என தனது ஸ்டூடியோவின் அழகு கலை நிபுணர் வினிதாவை அறிமுகப்படுத்தினார் சசிகலா. ஃபேசியல் குறித்த முழுமையான விளக்கங்கள் கொடுத்தார் வினிதா.

ஃபேசியலின் பயன்கள் என்ன?

‘ முதலில் கொடுக்கப்படும் மஸ்ஸாஜ் காரணமாக ரத்த ஓட்டங்கள் சீராகி, முகத்திற்கு மேலும் ரத்தம் கிடைத்து முகத்தின் பளபளப்பு மற்றும் ஆரோக்கியம் கிடைக்கச் செய்வதே ஃபேசியலில் பிரதான வேலை. அடுத்து நீண்ட நாட்கள் அழுக்கு, அதனால் உண்டாகும் கருந்திட்டுகள், வெள்ளை திட்டுகள், சரும துளைகளில் உள்ள மாசுகள் நீங்கி , வெயிலால் உண்டாகும் கருமையும் நீங்கி ஆரோக்கியமான முகப் பொலிவு கிடைக்கச் செய்வதும் ஃபேசியலின் வேலைதான்.

எந்த சருமத்திற்கு என்ன ஃபேசியல்?

‘ எல்லா வகையான ஃபேசியலும் எல்லா சருமத்தீற்கும் உண்டு. லைட்னிங், ஹைட்ரா, கோல்டன், டைமண்ட், சில்வர் , ஹெர்பல், இப்படி எத்தனையோ அட்வான்ஸ் ஃபேசியல்கள் எல்லாம் இருக்கு. எல்லா சருமத்தை சேர்ந்தவர்களுக்கும் அவரவர் சருமத்திற்கு ஏற்ப பயன்படுத்தப்படுகிற புராடெக்ட்கள் மாறும். உதாரணத்திற்கு கோல்டன் ஃபேசியல் எனில் ஆயில் சருமம் எனில் அவர்களுக்கு முதலில் சருமத்தில் அதிகமாக உள்ள ஆயிலை நீக்கி பின்ன ஃபேசியல் கொடுப்போம். வறண்ட சருமம் எனில் அதற்குரிய மாய்ச்சர் சீரம்கள் கொடுத்து ஃபேசியலை முடிப்போம். பயன்படுத்தப்படும், மஸ்ஸாஜ் க்ரீம்கள், சீரம்கள் இவைகள்தான் மாறும்.

கருப்பு புள்ளிகள்(பிளாக் ஹெட்ஸ்), வெள்ளைப் புள்ளிகள் எதனால் உருவாகின்றன… ஃபேசியலில் இவைகளுக்கு என்னத் தீர்வு இருக்கின்றன?

‘ நாள்பட்ட அழுக்குகள் சருமத்திற்கு அடியில் சென்று ஓரே இடத்தில் படிந்து கடினமான அழுக்காக மாறி சாதாரண சோப், அல்லது ஃபேஸ் வாஷ் கொண்டு கழுவினால் கூட போகாமல் மாறிவிடுபவைகள் பிளாக் ஹெட்ஸ் அல்லது ஒயிட் ஹெட்ஸ் என்போம். மஸ்ஸாஜ் மூலம் சருமத் துளைகளை தளர்த்தி, மேலும் ஆவி பிடிக்கச் செய்கையில் இன்னும் சற்று சரும துவாரங்கள் பெரிதாகி அழுக்குகள், மாசுகள், பிளாக்& ஒயிட் ஹெட்ஸ் எல்லாமே கிட்டத்த அதற்கான கருவி கொண்டு சுரண்டி நீக்குவதும் ஃபேசியலில் ஒரு ஸ்டெப்தான்.

ஃபேசியலில் என்னென்ன ஸ்டெப்கள் உள்ளன?

‘முதலில் அவர்களின் சருமம் எப்படிப்பட்ட சருமம் என கேட்டுத் தெரிந்துகொண்டு அவர்கள் ஏதேனும் பிரச்னைகள் சொன்னால்? அதாவது வெயிலால் அதீத கருமை, அல்லது பிளாக் ஹெட்ஸ், வறட்சி என சொல்லும் போது அதற்குரிய ஃபேசியல் தேர்வு செய்வோம். முதலில் கிளென்சிங், முகத்தை நன்கு கிளென்சிங் மில்க் கொண்டு தூய்மை செய்து தொடர்ந்து மஸ்ஸாஜ், ஸ்கிரப்பிங், அடுத்து ஸ்கிரப்பிங்கில் பெரிதான சரும துளைகளை மீண்டும் மூடச் செய்ய ஃபேசியல் பேக், தொடர்ந்து மாய்ச்சர் கொடுப்போம். ஃபேசியல் முடிந்த பின் 8 மணி நேரங்களுக்கு வெயிலில் செல்லக் கூடாது, மேலும் சோப், ஃபேஸ் வாஷ் உள்ளிட்ட எதுவும் பயன்படுத்தக் கூடாது. ‘ வீட்டில்தானே இருக்கிறோம் என பெண்கள் பலரும் தங்கள் வெளிப்புற தோற்றம் குறித்து பெரிதாக கவனம் செலுத்துவதே இல்லை. ஆணோ , பெண்ணோ யாராயினும் நம்மை நாம் முடிந்தவரை அழகான தோற்றத்தில் வைத்திருப்பதுதான் முதலில் நம்மை நாம் சந்தோஷமாக வைத்திருக்க உதவும். நாம் சந்தோஷமாக இருந்தாலே நம் வீட்டில் உள்ளோர் துவங்கி, அலுவலகம், பொது இடம் என எங்கும் நம்மைச் சுற்றி மகிழ்வான சூழல் நிலவும். அழுத்தமாகச் சொல்கிறார் சசிகலா.
– ஷாலினி நியூட்டன்

You may also like

Leave a Comment

fifteen + fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi