Tuesday, May 13, 2025
Home செய்திகள் நம் நிலத்தில் விளைந்தவை சாப்பிட மட்டும் அல்ல சருமத்துக்கும் நல்லது! சொல்கிறார் பிசினஸ் கேர்ள் பிரியதர்ஷினி!

நம் நிலத்தில் விளைந்தவை சாப்பிட மட்டும் அல்ல சருமத்துக்கும் நல்லது! சொல்கிறார் பிசினஸ் கேர்ள் பிரியதர்ஷினி!

by Porselvi

அந்தந்த ஊர் காலநிலைக்கு அந்த நிலத்திலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு உருவாக்கிற அழகு சாதன பொருட்கள் தான் பாதுகாப்பானது’ … அழுத்தமாக சொல்கிறார் பிரியதர்ஷினி. 25 வயதில் ஹோம் மேட்,ஆர்கானிக் காஸ்மெட்டிக்ஸ் உருவாக்கம் மற்றும் விற்பனை என தொழிலதிபராக சாதித்து வருகிறார். எப்படி சாத்தியப்பட்டது உங்கள் ஆர்கானிக் காஸ்மெட்டிக்ஸ்களின் சிறப்புகள் என்ன? பேச துவங்கினார் பிரியதர்ஷினி. ‘எனக்கு சொந்த ஊர் நாமக்கல் , என்னுடைய தொழிலுக்காகத் தான் சென்னையில் செட்டில் ஆகிட்டேன். படிச்சது அக்ரிகல்ச்சர், அதிலேயே விவசாயம் குறித்த பிசினஸ் பாடமாக எடுத்து படிச்சேன். அக்ரிகல்ச்சர் படிக்கும் பொழுது விவசாயிகள் கூட சேர்ந்து வேலை செய்வதும் ஒரு பாடப் பிரிவாக எங்களுக்கு வரும். அதில் அழகு சார்ந்த சில தாவர அடிப்படை மூலப் பொருட்களும் எனக்கு தெரிய வந்தது. விவசாயம் மற்றும் பிசினஸ் அதனுடன் சேர்ந்து காஸ்மெட்டிக்ஸ் மூன்றும் சேர்ந்து தான் இன்னைக்கு என்னுடைய ஆர்கானிக் காஸ்மெட்டிக்ஸ் பிசினஸ்’ ஆர்கானிக் என்பது தற்போது மிகப்பெரிய மாபியாவாகவே மாறி வருகிறது. உண்மையான ஆர்கானிக் தயாரிப்புகளை எப்படிக் கண்டறிவது உங்கள் ப்ராடக்ட் பற்றிச் சொல்லுங்க.

‘பொதுவாகவே சுத்தமான ஆர்கானிக் அல்லது இயற்கை பொருட்கள் நேரடியாக பயன்படுத்தும் பொழுது நிச்சயம் ஒரு சில ஆரோக்கியமான பக்க விளைவுகளை உண்டாக்கும். அதாவது லேசான எரிச்சல், அல்லது ஒரு முணுமுணுப்பு இதெல்லாம் இருக்கும். உதாரணத்துக்கு கற்றாழை ஜெல்லை நேரடியாக எடுத்து பயன்படுத்தும்பொழுது கொஞ்சம் எரிச்சலை உண்டாக்கலாம். இந்த எரிச்சல்தான் சருமத்தில் இருக்கும் கிருமிகள் கூட கற்றாழை போராடுறதுக்கான அறிகுறி. அதையே திரும்பத் திரும்ப பயன்படுத்தி பழக்கப்படுத்தும் பொழுது அது சரியாகும். இப்படிதான் ஆர்கானிக் தயாரிப்புகளும். சுத்தமான ஆர்கானிக் தயாரிப்புகள் எரிச்சல் முணுமுணுப்பு அல்லது மிண்ட் அடிப்படை கொண்ட காஸ்மெட்டிக்ஸ் எனில் ஒரு காரமான உணர்வும் உண்டாகும்.தைலம் தேய்க்கும் போது எரிச்சல், கூர்மையான வாசனை உண்டாகுமே அப்படி.

என்னுடைய ப்ராடக்ட்டில் குறிப்பாக லிப் பாம் மற்றும் லிப் கிளாஸ் இரண்டுமே ஒரு சிலருக்கு சின்ன எரிச்சலை அல்லது ஒரு காரத்தன்மையை கொடுக்கிறதா கஸ்டமர்கள் சொல்லுவாங்க. ஏனெனில் நான் நேரடியாகவே இயற்கை சார்ந்த மூலப் பொருட்களைத் தான் பயன்படுத்தறேன். என்னுடைய ப்ராடக்ட்டை அதிகபட்சம் மூன்று மாதங்களுக்கு மேல் பயன்படுத்த முடியாது. அதனால் தான் என்னுடைய காஸ்மெட்டிக்ஸ் சின்ன சின்ன பாட்டில்கள் மற்றும் டப்பாக்களில் விற்பனைக்கு கொடுக்கறேன். ஆரம்பத்தில் லிப் கிளாஸ் மற்றும் லிப் பாம் இதைத்தான் உருவாக்க ஆரம்பிச்சேன். ஏற்கனவே உங்க உதடுகள் கறுப்பா இருந்தா இந்த லிப் கிளாஸ் உதட்டில் உள்ள கருமை, இறந்த செல்களை நீக்கி இயற்கையாகவே பளிச் நிறம் கொடுத்து உதடுகளை மென்மையாக் கிடும். அப்படித்தான் என்னுடைய மற்ற ப்ராடக்டர்களும். ஏற்கனவே இருக்கும் பிரச்சனைகளை சரி செய்து அழகுக்கு அழகும் சேர்க்கும்’ உங்களுக்கான வாடிக்கையாளர்களை எப்படி பெறுகிறீர்கள்.

‘ எனக்கென தனி இன்ஸ்டா பக்கம், சமூக வலைத்தள விளம்பரங்கள் இப்படி ஆன்லைன் தளத்தில் தான் ப்ராடக்ட் பிரமோஷன் செய்றேன். அதைப்போல் என்னுடைய ப்ராடக்ட் ஆர்டரின் பெயரில்தான் தயாரிக்க ஆரம்பிப்பேன். காரணம் என்னுடைய தயாரிப்புகள் எல்லாமே இயற்கையானது என்கிறதால் மூன்று முதல் நான்கு மாதங்கள்தான் பயன்படுத்த முடியும். அதனால் அதிகமாக செய்து வைத்து வீணாக்க முடியாது. மேலும் எந்த பிரசர்வேட்டிவ், செயற்கை எசன்ஸ், உணவுக்கு பயன்படுத்தற கலர்கள் கூட நான் என்னுடைய காஸ்மெட்டிக் செல் பயன்படுத்துவது கிடையாது ‘என்னென்ன ப்ராடக்டுகள் உங்களுடைய ஸ்பெஷல் தொடர்ந்தார் பிரியதர்ஷினி.

‘லிப் பாம், லிப் கிளாஸ், பாடிபட்டர், மாய்ஸ்சுரைசர், லிப் ஸ்க்ரப்பர், ஹேர் ஆயில், ஷாம்பூ, ஃபூட் க்ரீம், ஐ க்ரீம், , இப்படி நிறைய ப்ராடக்டுகள் இருக்கு. சூழலுக்கு ஏத்த புராடெக்ட்களா இருக்கும். மேலும் இது அத்தனையும் வெஜிடேரியன் புராடெக்ட். இயற்கையை நம்பி, அதன் வழியிலேயே பழங்கால முறைப்படி இந்தப் புராடெக்ட்களை தயாரிக்கிறேன். மேலும் எந்த மெஷினோ, மிக்ஸர், மோட்டர்களோ இல்லாம எல்லாமே கைகளால் தயாரிக்கிற காஸ்மெடிக்ஸ். இதில் pH கலர் சேஞ்சிங் லிப் கிளாஸ்க்கு நிறைய கஸ்டமர்கள் இருக்காங்க. மற்ற பிராண்ட் புராடெக்ட்களை விட இந்த லிப் கிளாஸ் பிரைட் கலர் கொடுக்கறது மட்டும் இல்லாம மாய்ச்சர், இயற்கையாகவே உதடுகளை மென்மையாக மாற்றுகிற திறன் இருக்கறதை கண்கூடாக பார்க்கறதா நிறைய கஸ்டமர்கள் பாராட்டியிருக்காங்க. இதை பெரிய பிராண்டா உருவாக்கணும், ஆன்லைன் ஆர்டர்களுக்காக இணையதளமும் இருக்கு. அதுபோக எக்ஸ்போ, மார்க்கெட் ஸ்பேஸ்களிலும் ஸ்டால்கள் போடறேன். எவ்வளவு படிச்சு பெரிய வேலையில் இருந்தாலும் ஒரு சொந்தத் தொழில் அவசியம். அதுதான் நம்மை முதலாளியா மாற்றி ஓட வைக்கும். என்னை ஓட வைக்கவே சென்னை‘ஸ் பெஸ்ச் காஸ்மெடிக்ஸ் விருதும் கிடைச்சது’ வயதுக்கு மீறிய பக்குவமும், பொறுப்பும் மின்ன பேசுகிறார் இந்த இளம் தொழிலதிபர் பிரியதர்ஷினி.
– ஷாலினி நியூட்டன்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi