குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வனவிலங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதிலும் குறிப்பாக சிறுத்தை, கருஞ்சிறுத்தை, கரடி, காட்டு மாடு அதிகளவில் பகல் மற்றும் இரவு நேரங்களில் நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உலா வருவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில், இன்று காலை குன்னூர் அருகே உள்ள மவுண்ட்பிளசன்ட் குடியிருப்பு பகுதியில் கரடி ஒன்று புகுந்தது.
உணவுகளை தேடி படிகட்டுகளில் ஒய்யாரமாக நடந்து வந்தது. அப்பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் கரடியை கண்டு அலறி அடித்து ஓடினர். தகவலின்பேரில் வந்த வனத்துறையினர் சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.