சென்னை: வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று மாலை புயலாக வழுப்பெறும். இன்று உருவாகும் ஃபெங்கல் புயல் 29ம் தேதி வரை வங்க கடலில் புயலாகவே நீடிக்கும்: வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், ஃபெங்கல் புயல் 30ம் தேதி அன்று சென்னைக்கு 30கிமீ தொலைவில் மையம் கொள்ளும் எனவும், புயல் கரையை நெருங்கும் போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவாக உள்ள ஃபெங்கல் புயல் கரையை நெருங்கும் போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும்: வானிலை மையம்
0