சென்னை: வங்கக் கடலில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலை கொண்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நேற்று 12 மாவட்டங்களில் மழை பெய்தது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிகத் தீவிரமாக பெய்து வருகிறது. இதற்கிடையே, ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டது.
இந்நிலையில், இன்று முதல் 28ம் தேதி வரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னையில் இன்று இயல்பையொட்டி வெப்பநிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.