புனே: ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் 30வது போட்டியில் முன்னாள் சாம்பியன் இலங்கை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி அசத்தியது. முதலில் பந்துவீசிய ஆப்கானிஸ்தான் அணி இலங்கை அணியை 241 ரன்களுக்கு சுருட்டியது. இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மத் ஷா, ஹஸ்மதுல்லா மற்றும் அஸ்மதுல்லா ஆகியோர் அரைசதம் அடிக்க 45.2 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 3வது வெற்றியை பெற்றுள்ளதோடு, புள்ளிப்பட்டியலிலும் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. வெற்றி குறித்து ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி கூறுகையில், எங்கள் அணியை நினைத்து பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.
பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என்று 3 துறைகளிலும் எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் பவுலர்களின் செயல்பாடுகள் தரமாக இருந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் தீவிரமாக பணியாற்றி, எங்களுக்கு ஊக்கம் அளித்தனர். குறிப்பாக எங்கள் பயிற்சியாளர் ஜானத்தன் ட்ராட் எங்களுக்கு உற்சாகம் அளித்து கொண்டே இருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவதற்கு முன்பாக ஜானத்தன் ட்ராட் கூறிய வார்த்தை, எனது மனநிலையை ஒட்டுமொத்தமாக மாற்றியது. ஒரு கேப்டனாக நான் அணியை முன்னின்று சிறப்பாக விளையாடி வழிநடத்த வேண்டும். அதனை ஒவ்வொரு போட்டியிலும் செய்ய முயற்சிக்கிறேன். இதேபோல் இனி வரும் போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன்.
ரஷீத் கான் எங்களின் ஸ்பெஷல் வீரர். உலகின் தலைசிறந்த வீரரும் கூட. களத்தில் உற்சாகம் குறையாமல் துள்ளலுடன் இருப்பவர். ஆப்கானிஸ்தான் அணியின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். அதேபோல் மைதானத்திற்கு வந்து எங்களுக்கு ஆதரவு வழங்கிய இந்திய ரசிகர்களுக்கு நன்றி’’ என்றார். இலங்கை அணி முதல் முறையாக ஆப்கானிஸ்தானிடம் உலக கோப்பையில் தோல்வியை தழுவி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் அணி உலக கோப்பையில் நான்காவது வெற்றியை பெற்றிருக்கிறது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய மூன்று பலமான அணிகளை நடப்பு தொடரில் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்க