Friday, April 12, 2024
Home » பஸ்வான் மகன் கட்சிக்கு 5 சீட்: தம்பிக்கு கவர்னர் பதவி, பீகாரில் பா.ஜ புது ரூட்

பஸ்வான் மகன் கட்சிக்கு 5 சீட்: தம்பிக்கு கவர்னர் பதவி, பீகாரில் பா.ஜ புது ரூட்

by Ranjith

புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் 40 எம்பி தொகுதிகள் உள்ளன. இங்கு இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் நிதிஷ்குமார் பா.ஜ அணியில் சேர்ந்து விட்டார். இதையடுத்து பா.ஜ அணியில் 40 தொகுதிகளை பிரிப்பது தொடர்பாக நீண்ட குழப்பம் ஏற்பட்டது. இறுதியாக பா.ஜவுக்கு 17, நிதிஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் 16, ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வானுக் 5 சீட், பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி கட்சிக்கு ஒரு சீட், முன்னாள் ஒன்றிய அமைச்சர் உபேந்திரா குஷ்வாகா கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்டியல் இன்னும் இறுதியாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் பஸ்வான் தம்பியும், அவரது கட்சியை மகன் சிராக் பஸ்வானுக்கு வழங்காமல் கைப்பற்றிய ஒன்றிய அமைச்சருமான பசுபதிகுமார் பராஸ் அணியினருக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை. அதிலும் குறிப்பாக அவர் போட்டியிட்டு வென்ற ஹஜிப்பூர் தொகுதி சிராக் பஸ்வானுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் பராஸ் தலைமையிலான ராஷ்ட்ரீய லோக் தளம் கட்சி பீகாரில் பா.ஜ அணியில் இருந்து வெளியேறும் என்று கூறப்பட்டது. ஆனால் பசுபதிகுமார் பராசுக்கு கவர்னர் பதவி தருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளதால், அவர் திருப்தி அடைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

You may also like

Leave a Comment

11 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi