சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சாலை போக்குவரத்தில் சுங்கக்கட்டணம் தொடர்பாக பாஸ் டாக் முறையில் புதிய திட்டத்தை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் முறையில் சுங்கக் கட்டணம் செலுத்த ‘பாஸ் டாக்’ முறையில் ரூ.3,000 கட்டணம் செலுத்தி ஆண்டு முழுவதும் பயணிக்கலாம் என்ற புதிய அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த புதிய திட்டம் சாலைப்போக்குவரத்தில் கார்கள், ஜீப்புகள் மற்றும் வேன்கள் போன்ற வணிக ரீதியான தனியார் வாகனத்தைப் பயன்படுத்துவோர் தேவைக்கு ஏற்ப பயணத்தை மேற்கொள்ளவும், குறைவான கட்டணத்தில் ஆண்டு முழுவதும் பயணம் செய்யவும், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பாஸ் டாக் திட்டம் ஜி.கே.வாசன் வரவேற்பு
0